அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பலாப்பழம் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து, யாசின், மெக்னீசியம் போன்ற பல சத்துக்களை உள்ளடக்கியது. பலா சுளைகளை சிறிது சிறிதாக நறுக்கி மண்சட்டியில் போட்டு பால் ஊத்தி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து தேன், நெய், ஏலக்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகி நரம்புகள் வலுவடையும் என கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராமல் தடுக்கின்றது. இதில் இருக்கும் நார்சத்தினால் மல சிக்கல் வராமல் பாதுகாப்பதுடன் குடலையும் சுத்தப்படுத்துகின்றது என கூறப்படுகின்றது. பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பது குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகின்றது. இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகின்றது. ஆகவே இதய நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாக கருதப்படுகின்றது.
நோய்கள் அடிக்கடி தாக்கப்படுவார்களாக இருந்தால் பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரகக் குழாய் தொற்றுநோய்க்கு தினமும் இரண்டு வேளை பலாப்பழ ஜூசை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு குடித்து வந்தால் நோய் தீரும் என்று கூறப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.