எச்.வினோத் சபரிமலை யாத்திரைக்கு சென்றுள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சென்ற ஜனவரி 11ஆம் தேதி வெளியான திரைப்படம் துணிவு. இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், ஜான் கொக்கன், மகாநதி சங்கர் என பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். தற்போது இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

பலரும் படத்தை பாராட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் இயக்குனர் வினோத் சபரிமலைக்கு யாத்திரை சென்றிருக்கின்றார். மேலும் இது குறித்த வீடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.