வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கலையொட்டி வரும் 11-ம் தேதி துணிவு திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக எச்.வினோத் பேட்டி அளித்து  வருகின்றார். அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் பேசிய வினோத் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆரம்பமாவதற்கு முன்பாக சதுரங்க வேட்டை திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெர்சனை .தான் கூறினேன் அதை ஹீரோ சப்ஜெக்ட்டாக இல்லாமல் கதையாக எழுதியிருந்தேன்.

அந்த கதையை தற்போது தனுஷ் சாரிடம் சொன்ன பிறகு அவர் ஓகே சொல்லிவிட்டால் அது படமாக வரும் என தெரிவித்திருக்கின்றார். முன்னதாக தனுஷ் எச்.வினோத் கூட்டணியில் படம் உருவாக இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.