18 லட்சம் செலவு செய்து ஓநாயாக இளைஞர் மாறி உள்ளார்.

18 லட்சம் ரூபாய் செலவு செய்து இளைஞர் ஒருவர் ஓநாய் போல் மாறிய சம்பவம் ஜப்பானில் நிகழ்ந்துள்ளது. ஜப்பான் நாட்டின் டோக்கியோவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுவயதிலிருந்தே விலங்குகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அதன் காரணமாக புது முயற்சியில் களம் இறங்கிய இளைஞர் ஆடை அலங்கார நிபுணரை அணுகி, தான் ஓநாயாக மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சுமார் 50 நாட்களுக்கு பிறகு இளைஞருக்கான சிறப்பான உடை 18 லட்சம் ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டது. மேலும் அச்சு அசலாக உருமாறிய இளைஞரை கண்டு அனைவரும் அசந்து போனார்கள். ஓநாய் போல் தன்னை உரு மாற்றுவதற்காக 18 லட்சம் ரூபாய் செலவு செய்தது ஒரு பொருட்டாக தெரியவில்லை என்றும் தனது கனவு நினைவாகிவிட்டது எனவும் இளைஞர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இளைஞரின் இந்த வித்தியாசமான ஆசை பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.