17 லட்சத்தீவில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வசிக்காத 17 தீவுகளில் மக்கள் நுழைய தடை விதித்து லட்சத்தீவுகள் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லட்சத்தீவுகளில் உள்ள 36 தீவுகளில் 19 தீவுகள் மக்கள் வசிக்கும் தீவுகளாக அமைந்துள்ளது. 17 தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த தீவுகளில் தேசத் துரோக சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் மக்கள் வசிக்காத 17 தீவுகளில் மக்கள் நுழைய தடை விதித்து லட்சத்தீவுகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தடையை மீறி அந்த தீவுகளுக்குள் நுழைய முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.