காதல் வதந்திக்கு நடிகர் பிரபாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் பிரபாஸையும் நடிகை அனுஷ்காவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் காதலிக்கவில்லை என இருவருமே மறுத்தனர்.

இந்த நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை கீர்த்திசனனுடன் பிரபாஸுக்கு காதல் மலர்ந்துள்ளதாக தகவல்கள் பரவி உள்ளன. இதற்கு பதில் அளித்துள்ள பிரபாஸ் நானும் கீர்த்தி சனனும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் இதற்கு கீர்த்தி சனன் ஏற்கனவே விளக்கமாளித்துள்ளார். எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை என தெரிவித்தார்.