நெட்டிசன்கள் துணிவு திரைப்படத்தை பீஸ்ட் படத்துடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளுகின்றனர்.

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படமாக அமைந்துள்ளது துணிவு. பொங்கலுக்கு நேரடியாக மோதும் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களை பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் டிசம்பர் 31ஆம் வெளியாகிய துணிவு ட்ரைலர் 24 மணி நேரங்களுக்குள்ளாக முப்பது மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தின் பெரும்பான்மை ஷாப்பிங் மால்-ஐ சுற்றி நகர்வது போல துணிவு படம் வங்கியை சுற்றி நகரும் என தெரிகின்றது. ஆக்ஷன் காட்சிகளில் ஒற்றுமை, பணைய கைதிகளாகும் மக்கள், செல்வராகவனை நினைவூட்டும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம், அதிகாரத்தில் உள்ள அமைச்சர் போன்றவை பீஸ்ட் பட திரைக்கதை போல இருப்பதாக நெட்டிசன்கள் இருப்படங்களை ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர். மேலும் வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட சர்வதேச தொடரின் சாயல் அதிகமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.