அவெஞ்சர்ஸ் படம் மூலம் பிரபலமான நடிகர் ஜெர்மி ரென்னர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். வார இறுதியில் அவர் வீட்டின் அருகே பனிப்பொழிவை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது பனிப்புயல் தாக்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.