வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படம் வழக்கமான விஜய் திரைப்படமாக இருக்காது எனவும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் என்ற தகவல் வெளியானதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கின்றது. அண்மையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதை தொடர்ந்து ரசிகர்கள் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தனர். முன்னதாக ஜனவரி 2-ம் தேதி ட்ரைலர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் சில காரணகளால் வெளியாகவில்லை. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.