அமுதவாணன் மீது அசீம் குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பிறகு ஆறாவது சீசன் ஆரம்பமாகி தற்போது முடிவுக்கு வரவிருக்கின்றது. கமல் டாஸ்க் ஒன்றை கொடுக்கின்றார். அப்போது அசீம் ஜனனியின் வாய்ப்புகளை அமுதவாணன் பலவகையில் பறித்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

அவருடைய வாய்ப்புகளை பறித்து இருப்பதால் அடுத்தவர் வாய்ப்புகளை பறித்தவர் என்பவரை அமுதானிடம் தருகின்றேன் என ஒரு சீட்டை கொடுக்கிறார். அதை பெற்றுக்கொண்ட அமுதவாணன் பேசும்போது இல்ல அசீம் அது 100% போய் என கூறுகின்றார். ஆனால் அவர் பேசுவதை அசீம் காது கொடுத்து கூட கேட்கவில்லை. உங்களின் தேவைக்காக தான் பயன்படுத்திக் கொண்டீர்கள்.

குத்தம் உள்ள நெஞ்சுக்கு தான் குறுகுறுக்கும்.. ஜனனி இந்த வீட்டில் வெளியேற முழுக்க முழுக்க நீங்க தான் காரணம். அந்த பொண்ண நீங்க நல்லா உங்க தேவைக்கு பயன்படுத்தி நீங்க சேப் ஆயிட்டிங்க. ஆனா அந்த பொண்ணு வெளியே போயிடுச்சு என்ன தெரிவிக்கின்றார். இதற்கு அமுதவாணன் சூப்பர் என கூறுகின்றார். இதை பார்த்து நெட்டிசன்கள் கமல் ஒரு டாஸ்க் கொடுத்து கொளுத்தி போட்டு இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள்.