முன்னணி நடிகரான ஜெயம் ரவி சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், எங்கேயும் காதல், தில்லாலங்கடி, ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த பிறகு அவரது மார்க்கெட் உயர்ந்தது. அடுத்தடுத்த வெற்றி பாடங்களில் ஜெயம் ரவி நடிக்க ஆரம்பித்துள்ளார்.

ஜெயம் ரவி நடித்த இறைவன், அகிலன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. நேற்று ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். முதல் நாள் முடிவில் சைரன் திரைப்படம் 3.5 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.