
சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஓடும் பேருந்தில் 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தின் முன்பக்க கதவு திறந்திருந்துள்ளது. இதனால் இருக்கையில் அமர்ந்திருந்த தந்தையின் கையில் இருந்த குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்தது. திடீரென ஓட்டுனர் பிரேக் பிடித்ததால் தான் குழந்தை தவறி விழுந்தது என்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பேருந்தை ஓட்டியது ஓட்டுநர் சிவன்மணி என்பதும் நடத்துனர் பழனிச்சாமி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.