தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த அரசு பல புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி வகுப்பு வாரம் தோறும் 40 நிமிடங்கள் தனி பாட வேளையாக நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 9, 11 ஆம் வகுப்புக்கு வாரம் தோறும் புதன்கிழமையும், 10,12 ஆம் வகுப்புக்கு வெள்ளிக்கிழமையும் மதியம் ஏதேனும் ஒரு பாட வேளையில் இந்த வகுப்புகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.