சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் ஆலம்பாக்கத்தில் 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகும் காய்ச்சல் குணமாகாததால் மற்றொரு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளித்தும் 9 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.