தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டி20 உலகக்கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் காட்டிய வீரம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியக்க வைத்தது. மைதானத்தில் ஒரு போர்வீரனைப் போலப் போராடிய அவர், அதிரடியாக 84 ரன்களைக் குவித்ததோடு மட்டுமல்லாமல், முதல் சூப்பர் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு வெற்றியைத் தன் வசப்படுத்தப் போராடினார். தனி ஆளாக நின்று அவர் கொடுத்த அந்தப் பதிலடி தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தது. ஆனால், இரண்டு சூப்பர் ஓவர்கள் வரை சென்ற அந்த மாரத்தான் போராட்டம் கடைசியில் தோல்வியில் முடிந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
Rahmanullah Gurbaz absolutely devastated and in tears sitting lonely. 🥹💔
– Fell for Gurbaz, he gave his all but still somehow Afghanistan lost. pic.twitter.com/freDoqZuI1
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 11, 2026
ஆட்டம் முடிந்ததும் மைதானத்திலேயே ரஹ்மானுல்லா குர்பாஸ் விம்மி விம்மி அழுத அந்த நெகிழ்ச்சியான காட்சிகள் அங்கிருந்த ரசிகர்களின் கண்களைக் குளமாக்கியது. இவ்வளவு போராடியும் வெற்றியைத் தழுவ முடியவில்லையே என்ற அவரது அந்த ஆதங்கம், உண்மையான தேசப்பற்றையும் ஆட்டத்தின் மீதான காதலையும் காட்டியது. சக வீரர்கள் அவரைத் தேற்ற முயன்றாலும், அந்தத் தோல்வியின் வலி அவரது கண்ணீராக வழிந்தோடியது. “தோற்றது ஆப்கானிஸ்தான் அல்ல, அதிர்ஷ்டம் தான்” என்று சொல்லும் அளவுக்கு குர்பாஸின் அந்தப் போராட்டம் கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டது.
