ஐடெல் நிறுவனம் மிக குறைந்த விலையில் அதிக ஸ்டோரேஜுடன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐடெல் ஏ70 என்ற ஸ்மார்ட்போன் 256 ஸ்டோரேஜ் உடன் ₹8000 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட் போன் 3 GB, 4 GB என இரண்டு வேரியண்டுகளில் வெளியாகிறது. குறைந்த விலையில் அதிக ஸ்டோரேஜுடன் இந்தியாவில் வெளியாகும் முதல் ஸ்மார்ட் போனாக ஐடெல் ஏ70 பார்க்கப்படுகிறது.

இந்த ஐடெல் ஏ70 ஸ்மார்ட் போனில் 13 MP பின்புற கேமரா, 8 MP முன் கேமரா, 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட், 5000mAh பேட்டரி, 6.6 இன்ச் டிஸ்ப்ளே, 256 gb ஸ்டோரேஜ், 3gb / 4gb ram, Unisoc T603 சிப்செட் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் அமைந்துள்ளது.