
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து நேற்று மாலை பெங்களூரு நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த நிலையில் சித்தூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மொலிகி கட் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் மற்றொரு லாரி வந்து பேருந்தில் பின்பகுதியில் மோதியது.
இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற படுகாயம் அடைந்த 40 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.