தென்கொரியாவின் டேஜியான் நகரில் 8 வயது மாணவியை கத்தியால் குத்தி கொன்ற பள்ளி ஆசிரியைக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் மையாங் ஜே வான் (48). கடந்த பிப்ரவரி மாதம், அந்த பள்ளியில் படித்து வந்த 8 வயது சிறுமியை வகுப்பறையில் தாக்கி கொலை செய்த சம்பவம் அந்நாட்டை அதிர்ச்சியடையச் செய்தது.
சம்பவத்துக்கு பின்னர் மையாங் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், “அந்த சிறுமி பையில் கத்தியை கொண்டு வந்து சக மாணவர்களை குத்தி கொல்லத் திட்டமிட்டிருந்தாள். அதை தடுத்தபோது அவள் என்னை கத்தியால் குத்த முயன்றதால், நான் தற்காப்புக்காக அவளை தாக்கினேன்,” என்று கூறினார். ஆனால் விசாரணையில் அவர் மன அழுத்த பிரச்சனை காரணமாக சிறுமியை கொலை செய்ததும் பின்னர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்ததும் தெரிய வந்தது.
ஆனால் விசாரணையில், சிறுமியின் உடலில் பல கத்திக்குத்துக் காயங்கள் இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து மையாங் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, டேஜியான் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, மையாங் ஜே வானை குற்றவாளி என நிரூபித்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும், அடுத்த 30 ஆண்டுகள் அவரை போலீசார் கண்காணிக்கும் விதமாக கையில் மின்கண்காணிப்பு கருவி (electronic ankle monitor) அணிந்திருக்கும் விதத்தில் உத்தரவிட்டார். மேலும் சம்பவம் நடந்த 8 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்ட இந்த வழக்கு, தென்கொரியாவை உலுக்கிய சம்பவங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.
