ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிபிஎல் 2025-26 தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடும் பாபர் அசாம், தனது மோசமான பேட்டிங்கால் உலகம் முழுவதும் கிண்டலுக்கு ஆளாகி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடந்த முக்கியமான தகுதிச் சுற்றுப் போட்டியில், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாபர், 8 பந்துகளைச் சாப்பிட்டு வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 14.3 தான்! இதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், “இவரு எதுக்கு ஓப்பனிங் இறங்குனாரு?”னு பாகிஸ்தான் கிரிக்கெட்டை வச்சு செஞ்சுட்டு இருக்காங்க.



​பொதுவா ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆனா கூட இருக்கிற பார்ட்னர் கவலைப்படுவாரு, ஆனா பாபர் அவுட் ஆனதும் ஸ்டீவ் ஸ்மித் “அப்பாடா.. ஒரு வழியா போயிட்டான்!”னு நிம்மதி பெருமூச்சு விட்டிருக்காரு. ஏன்னா, பாபர் பந்துகளை வீணாக்கிக்கொண்டிருந்ததால் ஸ்மித்தால் ரன் எடுக்க முடியாமல் திணறி வந்தார். பாபர் அவுட் ஆன பிறகு, ஸ்மித் அதிரடியாக விளையாடி 54 ரன்களும், சாம் கர்ரன் 53 ரன்களும் எடுத்து சிட்னி சிக்ஸர்ஸ் அணியை வெற்றி பெற வச்சாங்க. பாபர் அசாம் போன மேட்ச்லயே ஸ்மித் கிட்ட சிங்கிள் எடுக்க விடாம அவமானப்பட்டாரு, இந்த மேட்ச்லயும் அதே கதை தான்!