தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் 8 தொகுதிகளை ரகசிய சர்வேயில் இபிஎஸ் அடையாளம் கண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொங்கு பகுதியில் கோவை உள்ளிட்ட நான்கு தொகுதிகள், தென் மண்டலத்தில் நெல்லை, வட தமிழகத்தில் ஆரணி உள்ளிட்ட மூன்று தொகுதிகளை டார்கெட் செய்திருக்கும் அதிமுக மேலிடம், கே.பி முனுசாமி, வேலுமணி, இசக்கி, சுப்பையா ஆகியோரை நேரடியாக களத்தில் இறக்கி வேலை பார்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.