மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த கபில் சூர்யவன்ஷி என்ற விவசாயி, தர்ப்பூசணி சாகுபடி மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய லாபம் ஈட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கோடை காலத்தில் தர்ப்பூசணிக்கு நிலவும் அதிக தேவையைக் கருத்தில்கொண்டு, சுமார் 70 நாட்களுக்கு முன்பு அவர் தனது நிலத்தில் சாகுபடி பணிகளைத் தொடங்கினார். விதை, உரம், பாசனம் மற்றும் கூலி என இதற்காக அவர் மொத்தம் ரூ.9,50,000 முதலீடு செய்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by 𝙆𝙖𝙥𝙞𝙡 𝙎𝙪𝙧𝙮𝙖𝙬𝙖𝙣𝙨𝙝𝙞 🇮🇳 (@youngindiankisan)

அறுவடைக்கு வந்த தர்ப்பூசணிகளில், முதல் தரமான 280 குவிண்டால் பழங்களை ஒரு கிலோ 8.50 ரூபாய் என்ற விலையிலும், சிறிய அளவிலான 45 டன் பழங்களை 1 கிலோ 4 ரூபாய் என்ற விலையிலும் அவர் விற்பனை செய்துள்ளார்.

இதன் மூலம் அவருக்குக் கிடைத்த மொத்த வருமானம் சுமார் ரூ.25,60,000 ஆகும். முதலீடு செய்த தொகையைத் தவிர்த்து, வெறும் 70 நாட்களில் அவருக்கு ரூ.16,10,000 நிகர லாபம் கிடைத்துள்ளது.

திட்டமிட்ட உழைப்பும், சரியான சந்தை வாய்ப்பும் இருந்தால் விவசாயத்திலும் கோடிகளை ஈட்டலாம் என்பதற்கு கபில் சூர்யவன்ஷியின் இந்த வெற்றி ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ள இந்தத் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.