7 வயது சிறுவனின் இடது நுரையீரலில் இருந்து தையல் ஊசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வெளியேற்றினர். மூக்கில் ரத்த கசிவு மற்றும் இருமலுடன் சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனை செய்த போது வயிற்றில் நான்கு சென்டிமீட்டர் தையல் ஊசி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் நான்கு மில்லி மீட்டர் அகலம் மற்றும் 1. மில்லி மீட்டர் பருமன் கொண்ட காந்தம் மூலம் எண்டோஸ்கோபி மூலம் தையல் ஊசியை வெளியே எடுத்தனர். தற்போது சிறுவன் நலமாக  உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.