மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினர், தங்களின் 7 மாத குழந்தையுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த கிராமத்துக்கு திரும்பிய சம்பவம் சோகத்தில் முடிந்துள்ளது.
மேலும் காதல் திருமணத்தை ஏற்க மறுத்திருந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மீண்டும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தம்பதியினர் குழந்தையுடன் கிராமத்துக்கு வந்த தகவல் பரவியதும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் தகராறு வன்முறையாக மாறி, இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனால் 7 மாத குழந்தையுடன் புதிய வாழ்க்கையை தொடங்கிய தம்பதியரின் கனவு இப்படி சோகமாக முடிந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணங்களுக்கு எதிரான குடும்ப மோதல்கள் இன்னும் சமூகத்தில் உயிர்ப்பலி வாங்கிக் கொண்டிருப்பதை இந்த சம்பவம் மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
