
இன்று மாலை 6 மணிக்கு தளபதி விஜய் மக்கள் இயக்க யூட்யூப் சேனலில் பிரத்யேக வீடியோ ஒன்று வெளியாகுமென இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் புஸ்ஸி ட்விட் செய்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்று பலருடைய பாராட்டுகளையும் பெற்றது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், அவருடைய அரசியல் பயணத்திற்கு மிக முக்கிய மைல்கல்லாக இந்த விழா அமையும் என அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டும் வந்தது. இதைத்தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளன்று தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான பயிலகங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இப்படி தொடர்ச்சியாக பல ஆக்டிவான செயல்களில் ஈடுபட்டு வரும் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தளபதி விஜய் அவர்களை சந்திக்கும் வழக்கம் என்பது அவ்வப்போது நடைபெறும். அந்த வகையில்,
விருது வழங்கும் விழாவில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட தலைவர்கள் மற்றும் அணி தலைவர்களை நடிகர் விஜய் அவர்கள் சந்தித்த பிரத்தியேக வீடியோ காட்சிகள் இன்று மாலை 6 மணிக்கு தளபதி விஜய் மக்கள் இயக்க யூடியூப் சேனலில் வெளியாகும் என தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் புஸ்ஸி தனது twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#EXCLUSIVE VIDEO !#தளபதிவிஜய்கல்விவிருது வழங்கும் விழாவில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்த தளபதி @actorvijay அவர்களின் பிரத்தியேக காணொளி!
இன்று மாலை 6 மணிக்கு நமது தளபதி விஜய் மக்கள் இயக்கம் @TVMIoffl Official… pic.twitter.com/QEegBv2ZIk
— Bussy Anand (@BussyAnand) July 21, 2023