டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் கே.எல். ராகுல் ருத்ரதாண்டவம் ஆடி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

தொடக்க வீரராகக் களமிறங்கிய ராகுல், பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 16 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 152 ரன்கள் குவித்து அசுரவேட்டை நடத்தினார். நிதிஷ் ராணாவுடன் இணைந்து அவர் அமைத்த அதிரடி பார்ட்னர்ஷிப் மூலம் டெல்லி அணி 20 ஓவர்களில் 264 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது.

இந்த சீசனில் 150 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை ராகுல் பெற்றுள்ள நிலையில், பஞ்சாப் அணிக்கு 265 ரன்கள் என்ற மலை போன்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராகுலின் இந்த அதிரடி ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வாயடைக்கச் செய்துள்ளது.