ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 15 வயதே ஆன இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி செய்த அசுரவேட்டை கிரிக்கெட் உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
கடந்த முறை நேருக்கு நேர் சந்தித்தபோது டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த பிரஃபுல் ஹிங்கேவுக்கு, இந்த முறை முதல் ஓவரிலேயே மரண அடி கொடுத்து பதிலடி கொடுத்துள்ளார் வைபவ். இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே ஹிங்கேயின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த வைபவ், 4 இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஒரே ஓவரில் 25 ரன்களைக் குவித்து ருத்ரதாண்டவம் ஆடினார்.

ஒரு சிறுவன் என்று கூடப் பார்க்காமல் சீனியர் பந்துவீச்சாளரை வைபவ் வெளுத்து வாங்கிய விதம், “வைபவ் சூர்யவன்ஷி – ஐபிஎல் தொடரின் அடுத்த சூப்பர் ஸ்டார்” என ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது.
