டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 லீக் போட்டியில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடிக்கு ஏற்பட்ட விபரீத காயம் கிரிக்கெட் ரசிகர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
பஞ்சாப் இன்னிங்ஸின் 3-வது ஓவரை அக்சர் படேல் வீசியபோது, பிரியான்ஷ் ஆர்யா அடித்த பந்து வானத்தை நோக்கி மிக உயரமாகச் சென்றது. அந்த கேட்சைப் பிடிக்க ஓடி வந்த லுங்கி என்கிடி, பந்தின் வேகத்தையும் திசையையும் கணிக்கத் தவறியதால், நிலைதடுமாறி தலைகீழாகத் தரையில் விழுந்தார்.
இதில் அவரது தலையின் பின்பகுதி தரையில் மிகப்பலமாக மோதியதில் அவர் மயக்கமடைந்து மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.
Delhi Capitals fast bowler Lungi Ngidi has been carried off the field after suffering a nasty heady injury pic.twitter.com/BoJPVUpyXf
— ExtraOrdinary (@Extreo_) April 25, 2026
“>
இந்தத் திக் திக் நிமிடங்களால் ஆட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது. லுங்கி என்கிடியின் நிலைமையைக் கண்டு பதறிப்போன மருத்துவக் குழுவினர் ஸ்ட்ரெச்சருடன் மைதானத்திற்குள் ஓடி வந்தனர். நீண்ட நேர சிகிச்சைக்குப் பிறகும் அவர் எழுந்திருக்க முடியாததால், மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
Lungi Ngidi hits his head/neck region and is carried in an ambulance which was brought on to the field. Hope there is no major injury and he recovers soon 🙏🙏#DCvsPBKS pic.twitter.com/4sZrIbeG6w
— Aryan (@chinchat09) April 25, 2026
“>
மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் இரு அணி வீரர்களும் இந்தச் சம்பவத்தைக் கண்டு பெரும் கவலையில் ஆழ்ந்தனர். லுங்கி என்கிடியின் காயம் எவ்வளவு தீவிரமானது என்பது குறித்து மருத்துவ அறிக்கைக்குப் பிறகே தெரியவரும் என்றாலும், இந்தச் சம்பவம் ஐபிஎல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
