குஜராத் மாநிலத்தில் 65 பெண் ஒருவர் பால் வியாபாரம் செய்து மாதம் 11 லட்சம் சம்பாதிக்கும் சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. இவ்வாறு வருடத்திற்கு 25 லட்சம் கோடி லாபத்துடன் பால் வியாபாரம் செய்து வருகின்றார். குஜராத் மாநிலம் பணஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள நபானா கிராமத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி நவல்பீன் தல்சம்பாய் சவுத்ரி,15 வருடங்களுக்கு முன்பு 15 எருமை மாடுகளுடன் பால் வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.

தற்போது அவரிடம் 250க்கும் மேற்பட்ட எருமைகள் உள்ளன. இதிலிருந்து தினமும் கிட்டத்தட்ட 1100 லிட்டர் பால் கிடைக்கிறது. இவர் நடத்தும் பால் பண்ணையில் 10 பேர் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு மாதம் ஒன்றை லட்சத்திற்கும் மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. 65 வயதிலும் பால் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் இந்த மூதாட்டியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.