இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இன்றைய காலத்தில் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. தற்போது பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் அட்டையை ஆதாரம் அச்சகம் வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் ஆதார் அட்டையில் அடிக்கடி தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆன்லைன் மூலமாக ஆதார் அட்டைதாரர்கள் இத்தகைய திருத்தங்களை மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய புதிய AI/ML சாட்போட் ‘Aadhaar Mitra’ – வை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாட் போட் ஆதார் தொடர்பான அனைத்து விவரங்களையும் அட்டைதாரர்களுக்கு வழங்குகிறது. அதாவது இது ஆதார் கார்டுகளின் தற்போதைய நிலைமையை கண்காணிக்கும். அது மட்டுமல்லாமல் ஆதார் மையம் நீங்கள் வசிக்கும் பகுதிகளின் அருகே எங்கு உள்ளது என்பதை எளிதில் காட்டும். மேலும் உங்களின் ஆதார் கார்டு பதிவு மற்றும் புதுப்பிப்பு விவரத்தை தெரியப்படுத்தும் விதமாக இந்த Chatbot செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.