கர்நாடகா மைசூருவை சேர்ந்தவர் பவித்ரா லோகேஷ். திரைப்பட நடிகையான இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் உட்பட மொழிப் படங்களில் நடித்து உள்ளார். இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். அதேபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ் 3 முறை திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபல நடிகை பவித்ரா லோகேஷுக்கு 2-வது திருமணம் நடைபெற்றது. மூத்த தெலுங்கு நடிகர் நரேஷும்(60), பவித்ராவும்(44) சமீப காலமாக காதலில் இருந்து வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் அன்று இருவரும் தங்களது காதலை அறிவித்த நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. தங்களது திருமண வீடியோவை நரேஷ் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.