அர்ஜென்டினா நாட்டிலுள்ள பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் அழகிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் லா ப்ளாட்டா நகரைச் சேர்ந்த அலெஜான்ட்ரா மரிசா ரொட்ரிக்ஸ் என்று 60 வயது பெண் கலந்து கொண்டார். இவர் 60 வயதிலும் பார்ப்பதற்கு இளம்பெண் போன்று தோற்றமளித்தார்.

இவர் அச்சு அசல் இளம் பெண் போலவே இருப்பதால் அழகி போட்டியில் கலந்து கொண்டார். இவரை சிறந்த அழகியாக தேர்வு செய்து கிரீடம் சூட்டியுள்ளனர். மேலும் 60 வயதிலும் இளம்பெண் போன்று அவர் தோற்றம் அளித்தது பலரது மத்தியிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.