தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் நடன கலைஞர் ராஜோஷி பருவாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில காரணங்களால் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஆஷிஷ் ரூபாலி பருவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அவரின் திருமண புகைப்படங்கள் வெளியான நிலையில் 60 வயதில் இவருக்கு மறுமணம் தேவையா என்று விமர்சித்தனர். இந்நிலையில் தற்போது இதற்கெல்லாம் செவி சாய்க்காத நடிகர் ஆசிஸ் மகிழ்ச்சியாக தனது இரண்டாவது மனைவியுடன் ஹனிமூன் சென்று உள்ளார். இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவுக்கு சென்ற அவர் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.