தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக பலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் சரத்குமார் மற்றும் ராதிகா. சமீபத்தில் சரத்குமார் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சரத்குமார் நடிகராக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.

மறுபக்கம் தமிழக அரசியலிலும் தற்போது ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று நடிகர் சரத்குமார் தன்னுடைய 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அப்போது தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராதிகா அவருக்கு அன்பு முத்தம் கொடுத்துள்ளார். தற்போது அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.