விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நாஞ்சில் விஜயன். அதிலும் குறிப்பாக பல நிகழ்ச்சிகளில் இவர் பெண் வேடமிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அதனால் இவருக்கு ரசிகர்கள் பட்டாலும் ஏராளம். தற்போது இவருக்கு சின்ன திரையில் வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் நாஞ்சில் விஜய் எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ளார். ஆனால் அதில் மணப்பெண் யார் என்பது தெளிவாக தெரியவில்லை. தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் நாஞ்சில் விஜயனுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.