சித்தூர் மாவட்டம் புங்கனூரில் கடந்த சில நாட்களாக நடந்த கொடூரம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அசன்துல்லா – சானியா தம்பதிகளின் 6 வயது மகள் அஸ்வியா, கடந்த 1-ஆம் தேதி திடீரென காணாமல் போனார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அஸ்வியாவின் உடல் ஏரியில் மிதந்து கிடந்தது.

இந்த கொடூர சம்பவத்திற்கு பின்னால் கடனுதவி தொடர்பான தகராறு தான் காரணம் என போலீசார் கூறியுள்ளனர். அசன்துல்லா, ரேஷ்மா என்ற பெண்ணுக்கு 3 லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். ஆனால், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தவில்லை. ரேஷ்மா பணம் கொடுக்க மறுத்து வந்தார். கடனை திருப்பிக் கேட்டது தொடர்பான மனஉளைச்சலில், ரேஷ்மா கடுமையான முடிவெடுத்து, கொடூரமாக செயல்பட்டார்.

ரேஷ்மா தனது தாய் ஹசீனா மற்றும் சிறுவனின் உதவியுடன், அஸ்வியாவை வீட்டிற்கு அழைத்துச் சென்று, திணற திணற சாப்பாடு கொடுத்து மூச்சை அடைத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் சிறுமியின் உடலை ஏரியில் வீசியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரேஷ்மா, அவரது தாய் மற்றும் சிறுவன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.