கௌஹாத்தியில் நடந்த இந்த சம்பவம் உண்மையிலேயே ரத்தத்தைக் கொதிக்க வைக்குது. பஞ்சாபரி பகுதியில் உள்ள அம்ரின் அக்தர் லஸ்கர் என்பவரது வீட்டில், 13 வயது சிறுமி ஒருவரை ஸ்டோரேஜ் பெட்டுக்குள் (Storage Bed) மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக அந்த வீட்டில் வீட்டுவேலை செய்து வந்த அந்தச் சிறுமியை, வீட்டின் உரிமையாளர் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில், மெஜிஸ்திரேட் முன்னிலையில் திடீர் ரெய்டு நடந்தபோது, போலீசாரிடம் இருந்து சிறுமியை மறைக்க அந்தப் பெண் செய்த காரியம் தான் உச்சக்கட்டக் கொடுமை.
A 13-year-old girl was rescued from horrific abuse in Panjabari after being found locked inside a divan storage box. The District Labour Task Force, with a magistrate present, raided the house of Amrin Akhtar Laskar (House No. 69, Juripar) on Sunday evening following local… pic.twitter.com/RUAkMl433K
— Ron Bikash Gaurav (@RonBikashGaurav) February 3, 2026
போலீசார் வருவதை மோப்பம் பிடித்த அந்தப் பெண், சிறுமியை பெட்டுக்கு அடியில் இருக்கும் குறுகிய ஸ்டோரேஜ் இடத்திற்குள் தள்ளிப் பூட்டியுள்ளார். சுமார் 25 நிமிடங்கள் மூச்சு விடக்கூட சிரமமான அந்த இருட்டு அறைக்குள் அச்சத்தில் உறைந்து போயிருந்த சிறுமியை, அதிகாரிகள் லாவகமாக மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமிக்குத் தற்போது முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சின்னஞ்சிறு பெண்ணை இப்படியெல்லாம் சித்திரவதை செய்த அந்தப் பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனிதாபிமானமே இல்லாத இந்தச் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
