திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சிவ சரண்யா என்பவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.இவர் கோவை மற்றும் அவிநாசி சாலையில் உள்ள எல்ஐசி உப்பிலிபாளையம் உள்ளிட்ட சிக்னல்களில் கடந்த மூன்று நாட்களாக தனது மகளுடன் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரின் ஆறு வயதான மகள் பழனியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் சொந்த வீடு பழனியில் உள்ளதால் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அங்கு உள்ளனர்.

சிவசாரண்யா மட்டும் பனி காரணமாக கோவையில் தங்கி இருந்தும் பழனிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த சிறுமி தன்னுடைய தாயாரின் பணியை நேரில் பார்க்கவும் தாயாருடன் நேரத்தை கழிக்கவும் ஆசைப்பட்டதால் தான் செய்யும் பணியை பார்த்தால் குழந்தைக்கு ஒரு புது அனுபவம் கிடைக்கும் என்று எண்ணி சிவசரண்யா தனது மகளையும் பணிக்கு அழைத்து வந்துள்ளார். மகளின் ஆசையை ஏற்று மகளுடன் இருந்தவாறு பணிபுரிந்து ஆசையை நிறைவேற்றியுள்ளார் காவல் தாய்.