கேரள மாநிலத்தில் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அச்சப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும் தெரு நாய் கடியினால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலப்புரத்தில் உள்ள 6 வயது சிறுமியை தெரு நாய் ஒன்று கடித்து குதறியது. சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் தெருவில் செல்லும்போது தெருநாய்கள் அவர்களை விடாது துரத்தி கடிக்கிறது.
இதனால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு பரவி வருகிறது. எனவே நோய் தொற்று மற்றும் நோய் பாதித்த தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஒரு முடிவு செய்துள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்தும் விதமாக அந்த நாய்களை கருணை கொலை செய்ய கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தெரு நாய் கடியினால் ரேபிஸ் தொற்று அதிகரித்து வருவதாக கால்நடை மருத்துவர்களிடம் சான்று பெற்று கருணை கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
