
திருநெல்வேலியில் விடா முயற்சியுடன் ஏழாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் அத்தியடி கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவரது இரண்டாவது மகன் முகமது பைசல். இவர் தொடர்ந்து ஆறாவது முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதிய முகமது 603 மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் வாய்ப்பை பெற்றுள்ளார். மனம் தளராது தொடர்ந்து முயற்சி செய்த மாணவருக்கு ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.