முதல் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் ரூ.2,820.90 கோடி மதிப்பில் ஆறு பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை ஆறாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை சாத்தியப்படுத்த சர்வதேச வங்கிகளிடமிருந்து கடனுதவி பெறுவதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.