
“ஒரு முறை விழுந்ததற்காகவே வாழ்க்கை முடிவடையாது. அவ்வழியில் புதிய பாதையை உருவாக்கலாம்” – இதற்கான உயிரோட்டமான எடுத்துக்காட்டு தான் ராஜஸ்தானின் பிகானரில் பிறந்த ஆகாஷ் குல்ஹாரி.
1996-ஆம் ஆண்டு, 10ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் வெறும் 57% மட்டுமே பெற்று, பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பலருக்கு இது வாழ்க்கையின் full stop ஆக அமைந்திருக்கும். ஆனால் ஆகாஷ் அதை turning point ஆக்கினார். தாயின் உறுதியான ஆதரவுடன் மீண்டும் கல்விக்குத் திரும்பி, 12ஆம் வகுப்பில் 85% என்ற பெரும் சாதனையைப் பதிவு செய்தார்.
அதன் பின்னர் B.Com, M.Com, M.Phil என கல்விப் பாதையை தொடர்ந்து வலுப்படுத்தியவர், JNUவில் படித்தபோதே தாயின் கனவை நினைத்து UPSC தேர்வுக்குத் தயாரானார். முதல் முயற்சியிலேயே IPS தேர்வு வென்று இந்திய காவல் துறையில் சேர்ந்தவர். தற்போது கான்பூரில் கூடுதல் காவல் ஆணையராக பணியாற்றும் ஆகாஷ், இன்று எண்ணற்ற இளைஞர்களுக்கு எழுச்சியின் சின்னமாக விளங்கி வருகிறார்.
அவரது பயணம் எளிதானது இல்லை. ஆனால் அவர் எடுத்த முடிவு தெளிவானது – “வழி இல்லையென்றால் உருவாக்குவேன்!” வாழ்க்கை ஒரு தடங்கல் என்றால், அதை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்ற வேண்டும் என்பதற்கான மூச்சுள்ள சாட்சி ஆகாஷ் குல்ஹாரி.
இது வெறும் IPS அதிகாரியாக ஆன பயணம் அல்ல… இது ஒரு கனவின் எழுச்சி!