ஹைதராபாத்தில் புதிய ஜிம் திறப்பு விழாவில் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி பங்கேற்று, உடற்பயிற்சியில் கலந்துகொண்டார். டம்பல்ஸையும் கனரக இயந்திரங்களையும் எளிதாகத் தூக்கிய அவர், தனது தனித்துவமான பாணியால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
56 வயதான ஒவைசி, தனது அரசியல் உற்சாகத்துக்கு இணையாக உடல்நலத்திலும் அதிக கவனம் செலுத்துகிறார் என்பதை இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது. தற்போது சமூக வலைதளங்களில் இந்தக் காட்சி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைக் கண்டு இளைஞர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளனர். “இந்த வயதிலும் இப்படிப்பட்ட சுறுசுறுப்பு அரிது” என்று பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. அரசியல் மேடையில் எப்போதும் வலுவான கருத்துக்களை பதிவு செய்து வரும் ஒவைசி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்துவது அனைவருக்கும் ஊக்கமாக உள்ளது.
#WATCH | Hyderabad, Telangana: AIMIM chief Asaduddin Owaisi participates in a workout session during gym inauguration in Hyderabad
(Source: AIMIM PRO) pic.twitter.com/s7hbOgcjWk
— ANI (@ANI) August 16, 2025
“>
இதேவேளை, சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் மிரட்டலுக்கு எதிராக கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருந்தார் ஒவைசி. “இந்தியாவை அச்சுறுத்தும் கூற்றுகள் பலன் அளிக்காது. இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை சக்தி உலகுக்கு தெரிந்ததே” என எச்சரித்திருந்தார். இவ்வாறான கூர்மையான கருத்துக்களுடன், உடற்பயிற்சி வீடியோவும் சேர்ந்து ஒவைசியை மீண்டும் நாடு முழுவதும் வைரல் நியூஸாக மாற்றியுள்ளது.
