தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமி பேட்டையில் சரவணன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலில் அர்ச்சகராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சரவணன் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் நேற்று முன்தினம் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சரவணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.