மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரிசர்வ் வங்கியில் இரு கொள்கை குறித்து அறிவிப்பை அதன் ஆளுநர் சக்தி காந்தாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதத்தை உயர்த்தி 6.50 ஆக நிர்ணயத்திருக்கிறது. ஆர்பிஐ மேலும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கியின் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களே இதில் பாதிக்கப்படுவார்கள்.

இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்க போகிறதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் மாத தவணை முறையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என பல நடுத்தர மக்களின் நிலையே குலைந்து விடும் அளவிற்கு இருக்கிறது. இந்நிலையில் மணி கண்ட்ரோல் லயாஸிஸ் போர்ஹவுஸ் பர்சஸ் அகாடபிலிட்டி இண்டெக்ஸ் இந்தியாவின் முக்கிய நகரங்களில் சராசரி மாத வாடகையை கணக்கில் கொண்டு ஒரு சொந்த வீடு வாங்க எத்தனை மாத வாடகை தேவைப்படுகின்றது என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

32 நகரங்கள் கொண்ட பட்டியலில் வீட்டு வாடகை முதன்மையாகக் கொண்டும் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய அடிப்படை வசதிகள், பயண தொலைவுகள் முதலியவற்றை கருத்தில் கொண்டும் இந்த பகுப்பாய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் மோஸ்ட் அபார்டபிள் இந்தியா என்ற பட்டியலில் பெங்களூரு மட்டும் தனித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்தூர், ராஜ்கோட், பதோதரா, கொல்கத்தா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.

ஏனெனில் பெங்களூரில் 330 மாதங்களுக்கான வாடகையை வைத்து ஒரு வீட்டை வாங்க முடியும். இதே போல ஹைதராபாத்திற்கு 472 மாதங்கள், சென்னைக்கு 511 மாதங்கள், கோவைக்கு 498 மாதங்கள், டெல்லிக்கு 449 மாதங்கள், கொச்சிக்கு 401 மாதங்கள், கொல்கத்தாவுக்கு 358 மாதங்கள், திருவனந்தபுரத்திற்கு 494 மாதங்கள் என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் கணக்கிட்டால் சென்னையில் ஒரு வீடு வாங்க கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு வாடகை கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது.