தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் என்ன பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது என்று கேள்வி எழுப்புபவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ள தனது நிஜமான அனுபவப் பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அந்தப் பெண்மணி தனது பதிவில் கூறியிருப்பதாவது, “இன்று எனது கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுப்பதற்காகத் தலைமைச் செயலகத்திற்குச் சென்றிருந்தேன். மாலை 5:10 மணிக்கு எனது மனுவைச் சமர்ப்பித்தேன். சரியாக 5:14 மணிக்கு எனது செல்போனுக்கு மனு பதிவு செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்தி (SMS) வந்தது. தொடர்ந்து, 5:20 மணிக்கெல்லாம் மனுவுக்கான ஒப்புகைச் சீட்டை எனது கையில் வழங்கிவிட்டார்கள்” என்று தனது வியப்பைப் பகிர்ந்துள்ளார்.
அதோடு நின்றுவிடாமல், அங்கிருந்த அரசு ஊழியர் ஒருவர் பெறுநர் முகவரியை தெளிவாக எழுதிக் கொடுத்து, “இந்தத் துறை மேலாண்மை இயக்குநரை (MD) நேரில் சென்று பாருங்கள்” என்று அன்போடு வழிகாட்டினாராம். மேலும், “மாற்றுத்திறனாளிகள் கொடுக்கும் மனுக்கள் மீது எந்தவித தாமதமுமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தீர்வு காணப்பட வேண்டும் என அண்ணன் தவெக தலைவர் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று அந்த ஊழியர் கூறியதும், தான் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டதாக அந்தப் பெண் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
TVK ஆட்சியில் அப்படி என்ன மாற்றம் என்று கேட்பவர்களுக்கு பதில்…
இன்று என்னுடைய அனுபவம்…
இன்று முதலமைச்சர் தனி பிரிவில் மனு கொடுக்க தலைமைச் செயலகம்… சென்றிருந்தேன்….
5 :10 க்கு… மனு கொடுத்தேன்… 5.14க்கு… Msg வந்தது…
5 :20 க்கு ஒப்புகைச் சீட்டு கையில… pic.twitter.com/70TO86HHJT— SUMI (@NSSumithra) August 10, 2026
மனு கொடுத்த சில நிமிடங்களிலேயே தீர்வுக்கான வழி பிறந்ததும், அரசு ஊழியர்களின் இந்த கனிவான அணுகுமுறையும் தவெக ஆட்சியின் சிறந்த நிர்வாகத்திற்குச் சான்று என அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவருக்கு நேர்ந்த இந்த நெகிழ்ச்சியான அனுபவப் பதிவு, தற்போது இணையத்தில் வைரலாகி, தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
