ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது இதில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொகுதியில் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பெண்கள் ஓட்டு போட தயாராகி விட்டனர் என்றும் எம்ஜிஆருக்கு திண்டுக்கல் தேர்தல் போல இபிஎஸ்ஸுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி திருப்புமுனையாக அமையும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் தேர்தல் முடிவு இருக்கும். குறைந்தது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.