ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடி பிடிக்கத் தொடங்கிவிட்டது. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக மற்றும் அதிமுக செயல் பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்காக அழைத்துச் செல்லப்படும் பெண்களுக்கு அரசியல் கட்சிகள் மாறி மாறி பணம் கொடுப்பதாக ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஈரோடு கிழக்கில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தினந்தோறும் 300 ரூபாய் சம்பளம் கிடைக்கும் நிலையில் காலையில் பிரச்சாரத்துக்கு செல்லும் பெண்களுக்கு 500 ரூபாயும் மாலையில் பிரச்சாரத்துக்கு செல்லும் பெண்களுக்கு 500 ரூபாயும் தினம் 1000 ரூபாய் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

குறிப்பிட்ட ஒரு கட்சியின் வாகனம் ஒரு இடத்திலிருந்து பெண்களை அழைத்து சென்று விட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து இறக்கி செல்கிறதாம். காலை நேரத்தில் ஒரு கட்சிக்காக பிரச்சாரத்துக்கு செல்லும் நிலையில் மாலை வேறொரு கட்சிக்கு பிரச்சாரத்துக்காக பெண்கள் செல்கிறார்களாம். இதன் காரணமாக பெண்களுக்கு தினந்தோறும் 1000 கிடைப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு பண பட்டுவாடா போன்ற நடவடிக்கைகளை தடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது பெண்களுக்கு பிரச்சாரத்துக்காக‌ ரூ. 1000 கொடுக்கிறார்கள் என்று ஒரு தகவல் வெளிவருவது அதிர்ச்சியாக இருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.