அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கணவன்மார்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் 14 வயது உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். இதன் காரணமாக குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கணவன்மார்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி போலீசார் குழந்தை திருமணம் செய்தவர்களை வலைவீசி தேடி வரும் நிலையில் இன்று 50 கணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் யாராவது சிறுமிகளை திருமணம் செய்து இருந்தால் அவர்கள் தானாகவே வந்து சரணடைந்து விடுமாறும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீதான நடவடிக்கைகள் மூலம் இதுவரை 4004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.