மத்திய மாநில அரசுகள் பொது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் சுய தொழில் கடன் திட்டம். இந்த திட்டம் கர்நாடக மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் சுய தொழில் கடன் திட்டம். இந்த திட்டம் கர்நாடக மாநில அரசால் செயல்படுத்தப்படுகிறது.

சுயமாக தொழில் தொடங்க நேரடி கடன் வழங்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் யூனிட் செலவு ஒரு லட்சம். அதில் 50 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள ஐம்பதாயிரம் ரூபாய் கடனாக இருக்கும் .இதில் வாங்கும் கடன் தொகை நான்கு சதவீத வட்டி விகிதத்தில் 30 தவணைகளை திருப்பி செலுத்த வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பவர் கர்நாடக மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.