பொதுவாக துணிக்கடைகளுக்கு செல்லும் போது நாம் தேர்ந்தெடுத்த உடை சரியாக இருக்கின்றதா என்பதை பார்க்க ட்ரையல் ரூம் அவசியம். ஆனால் அப்படிப்பட்ட ட்ரையல் ரூம்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்குமோ என்ற அச்சம் அவ்வபோது எட்டி பார்ப்பது உண்டு. முதலில் ட்ரையல் ரூமில் உள்ள கண்ணாடியை தொட்டுப் பார்க்க வேண்டும். சாதாரண கண்ணாடியில் விரலுக்கும் விரல் பிம்பத்திற்கும் சிறு இடைவெளி காணப்படும்.
2வே மிரராக இருந்தால் ஒட்டாது. அப்படி இருந்தால் அது வேவு பார்க்கும் கண்ணாடி என்பதை புரிந்து கொள்ள வேண்டு.ம் ட்ரையல் ரூமில் லைட் ஆப் செய்துவிட்டு மொபைல் பிளாஷ் லைட் கொண்டு பார்த்தால் அறையில் கேமரா இருந்தால் கண்டுபிடித்து விடலாம். ட்ரைல் ரூமில் மட்டும் மொபைல் சிக்னல் கிடைக்கவில்லை என்றால் கேமரா பொருத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. கேமராக்கள் வைஃபை சிக்னல் தேவைப்படும்.
எனவே மொபைலில் வைஃபை செட்டிங்கை ஆன் செய்து அங்கே கிடைக்கும் கனெக்ஷன் உடன் இணைய முடிகின்றதா என்பதை பார்க்க வேண்டும். பின் அதே வைஃபையை பயன்படுத்தி வேறு டிவைஸ்கள் இயங்குகின்றதா என்பதை கண்டறியும் ஆப் உபயோகித்து பார்க்கும்போது கேமரா நிறுவனங்களின் பெயர்கள் அடிபட்டால் கேமரா பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
இது மட்டுமல்லாமல் கண்களின் இருபுறமும் வெளிச்சம் புகாதவாறு கைகளை வைத்து மறைத்துக்கொண்டு கண்ணாடியை உற்றுப் பார்த்தாலே அந்த பக்கம் இருப்பது என்ன அல்லது கேமரா இருக்கின்றதா என்பதை கண்டுபிடித்து விடலாம். இனி இந்த ஐந்து டெஸ்ட்-அ செஞ்சு பாத்துட்டு நிம்மதியா டிரஸ் மாத்துங்க.